உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
50 அதிகமான காகங்கள் திடீரென  உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரைத் தெரியவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50 ற்கும் அதிகமான காகங்கள் உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில் சில காகங்கள் உடல்வலிமையில்லாமல் சோர்ந்த நிலையிலும் காணப்பட்டது.

இதன்போது அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் வருகைத் தந்து உயிரிழந்த காகங்களை பார்வையிட்டனர்.

குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டரிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

Related posts

பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் மூவர் கைது…

wpengine

றகர் வீரர் வஸீம் கொலையின் சந்தேகநபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

wpengine

இராணுவத்தினர் எரிபொருள் விநியோகம் செய்வதில் தடை…………

wpengine