Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைப்பு..!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1281 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related posts

சந்தையில் கோழி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு?

wpengine

சஜித்தை வேட்பாளராக நிறுத்தக் கோரி பெளத்த பிக்குகள் விசேட பூஜை

wpengine

“மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டலில் 25 ஏக்கரில் கைத்தொழில்பேட்டை” முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

wpengine