Top Story 2உள்நாட்டு செய்திகள்

தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டி எடுக்கப்படும்

முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) தோண்டி எடுக்கப்படவுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இன்று தோண்டி எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

wpengine

சிகரட் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு…

wpengine

வெசாக் காலப்பகுதியில் கொழும்பில் விசேட பாதுகாப்பு…

wpengine