உள்நாட்டு செய்திகள்

தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுதிரள வேண்டும் – மஹிந்த



பாரிஸ் தீவிரவாத தாக்குதல் ஆச்சரியத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்திய சம்பவம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம் தொடர்பில் அதனை அனுபவித்தவர்களே நன்கறிவார்கள் எனவும், பிரான்ஸ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமையை இலங்கை மக்களால் நன்கு புரிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தனது அனுதாப செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று தசாப்தங்களாக இலங்கை எதிர்நோக்கிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு தானும், அரசாங்கமும் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, அதனை மீண்டும் தலைதூக்க விடாது செயற்பட்டமையினாலேயே இன்று இலங்கை அமைதியான சூழலில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சோகத்திலுள்ள பிரான்ஸ் மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுதிரள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

தம்புள்ளை முன்னாள் மேயர் கைது

wpengine

மக்களின் நலன்கருதி விசேட புகையிரத சேவைகள்…

wpengine

வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

wpengine