உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபரின் பதவி காலம் மூன்று மாதம் நீடிப்பு ?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு பெற்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் மேலும் ஒரு தவணை நீடிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பு ஜூன் 26 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்தப் பதவிக்கு தகுதியுள்ள பல மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தொடர்பான சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்படாததால் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சேவை மீண்டும் ஒருமுறை நீடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இதன்படி தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு அடுத்த வருடம் வரை சேவை நீடிப்பு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நியூசிலாந்து அணியானது நாணயற் சுழற்சியில் வெற்றி

wpengine

இன்று முதல் கடுமையான சட்டம் அமுலுக்கு

wpengine

சஜித்தின் இடத்திற்கு மூவர் நியமனம்

wpengine