Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்னாள் சட்டமா அதிபர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்வதையும், சட்டமா அதிபராக அவரது செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதையும் தடுத்து, பயங்கரவாத தடுப்பு பணியகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

உள்ளுராட்சி சபை சட்ட மூலத்திலுள்ள பிரச்சினைகளை ஆராய 10 பேர் கொண்ட குழு நியமிப்பு.

wpengine

இன்று(15) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்…

wpengine

சைட்டத்திற்கு தொடர்ந்தும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.. வதந்திகளை நம்ப வேண்டாம் – சைட்டம் நிர்வாகம்…

wpengine