உள்நாட்டு செய்திகள்

பொதுசன பெரமுனவின் பொதுச்சபை கூடியது சட்டபூர்வமானதல்ல- ஜீ. எல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை சட்டபூர்வமானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நேற்றையதினம் பொதுச் சபை கூடிய
போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கடிதத் தலைப்பின் கீழ் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் நேற்றுக் காலை 10 மணிக்கு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஆரம்பமானது.

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் உத்துராவல தம்மரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்றையதினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கோன எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் 25 லீற். பெற்றோலுடன் கைது

News Editor

போலி உரிமை பத்திரம் வழக்கில் உதய கம்மன்பிலவுக்கு பிணை.

wpengine

சபீர் ரஹ்மான் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு விசாரணை..

wpengine