உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

3 துண்டாகிய நிலையில் மொட்டு: தேசிய பட்டியலில் மீண்டும் எம்.பி யாக பசில் முயற்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் குழுவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் குழுவும் அதில் பிரதானமாக உள்ளதாகவும், மற்றைய குழு ஜனாதிபதியுடன் பயணிப்பது பொருத்தமானது என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, ​​பொசன் போயாவிற்கு முன்னர் மொட்டுக்கட்சியின் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்ல தயார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பசில் ராஜபக்ச தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மொட்டுக்கட்சியினர் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்லும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிப்பு…

wpengine

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு…

wpengine