Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுஜன பெரமுன ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, இதனை எவராலும் அசைக்க முடியாது..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எம்முடனேயே உள்ளார், இந்த ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், 

மொட்டுவின் ஆட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும்தான் பதவி விலகினார்கள். ஆனால், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமருடன் ‘மொட்டு’ ஆட்சி தொடர்கின்றது.

ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்த்தன ஆகிய இருவரும் எனது சிறந்த நண்பர்கள். ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகிக்கும் அவர்களுக்கு எமது கட்சியின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன எமது கட்சியின் மூத்த உறுப்பினர். அவரின் பதவியை நாம் பறிக்கவுள்ளதாக சில ஊடகங்கள் விஷமத்தனமான பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதற்குப் பின்னால் எதிர்க்கட்சியினர் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி…

wpengine

பிரதமரை வழியனுப்ப ரதன தேரர் முயற்சிக்கிறாரா?

wpengine

மேலும் 10 இலட்சம் ‘சைனோபாம்’ தாயகத்திற்கு

wpengine