உள்நாட்டு செய்திகள்

விமான நிலையத்தில் மஹிந்தானந்தவை திருப்பியனுப்பியமை குறித்து விசேட அறிக்கை

வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை வழிமறித்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளுடன் தொடர்புடைய வேறு ஒருவரின் தரவுகள் உள்ளடக்கப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முறையான தகவல்களை கணினியில் உள்ளீடு செய்த அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் மன்றம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

´சொல்டா´வை தொடர்ந்து ´சமியா´வும் பலி

wpengine

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

wpengine

பிரதமர் ரணில் இன்று இந்தியா விஜயம்…

wpengine