உள்நாட்டு செய்திகள்

சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுமி ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமியின் மாற்றாந்தாய் எனவும், சிறுவனின் தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சேதமடைந்த நாணயத்தாள்கள் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றது…

wpengine

மிஹின் லங்கா வழக்கில் முன்னாள் பா.உ சஜினுக்கு பிணை..

wpengine

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு!

Azeem Kilabdeen