உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹில்டன் பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்ய பிரதமர் பணிப்பு



ஹில்டன் பணிப்பாளர் சபையை பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இலங்கையின் முதனிலை ஹோட்டல்களில் ஒன்றான ஹில்டன் ஹோட்டலின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு பிரதமர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

இன்னும் அலரி மாளிகைக்கு பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது விளக்கங்களையோ காரணங்களையோ கூறி காலத்தை பிற்போடாது உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஹில்டன் ஹோட்டலின் தற்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பதவி விலகியதும் கிருஷாந்த குரே தலைமையிலான புதிய பணிப்பாளர் சபையொன்று நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு

wpengine

ரஞ்சன் ராமநாயக்க கைது

wpengine

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

wpengine