உலக செய்திகள்

துருக்கியில் அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 18பேர் பலி



துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் இதுவரை 7 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.

கிரீஸ் நாட்டை அடைய முயற்சி செய்த இவர்களின் படகு, கனக்கலே என்ற இடத்திலிருந்து கிரீஸின் லெஸ்பாஸ் தீவு நோக்கி வந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

துருக்கி கடலோரக் காவற்படையைச் சேர்ந்தவர்கள் சடலங்களை மீட்டனர். இதில் கர்ப்பிணிப் பெண் உட்பட 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 18 பேர் பலியானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலியானோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஹெலிகாப்டர்கள் படகு கவிழ்ந்த இடத்தில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

Related posts

கொரோனாவுக்கு பலியாகும் முதல் உலகத் தலைவர்

wpengine

சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அவுஸ்ரேலியா

wpengine

2018, 2019 ஆண்டுகளில் ரஷ்யாவில் இராணுவ செலவினங்கள் குறைப்பு…

wpengine