Top Story 2உள்நாட்டு செய்திகள்

சிறுநீரக கடத்தல் : ‘பாய்’ கைது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொரளை, கோட்டா வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தலின் பிரதான முகவராக இருந்த நபர் நேற்று (5ஆம் திகதி) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்குளி, கஜிமாவத்தை பகுதியைச் சேர்ந்த பாய் என்ற மொஹமட் பசீர் மொஹமட் ரஜப்தீன் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுச் சென்றதாகவும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் 2 ஆம் பிரிவு நிலையத் தளபதி பிரதிப் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். ரத்னமலலாவுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு 14, 15 பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் பெண் ஒருவரும் ஒன்றரை இலட்சம் ரூபா 80 இலட்சம் என வெவ்வேறு விலைகளை தருவதாகக் கூறி இந்த மோசடியை நடத்தி வருகின்றனர்.

பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்த நால்வரும் மற்றும் பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் அஜித் தென்னகோனிடம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வைத்தியப் பரிசோதனையில் இவர்களின் சிறுநீரகம் ஒன்று அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுநீரகத்தை வழங்கியவர்கள் தமக்கு வாக்குறுதியளித்த பணத்தை வழங்கவில்லை என பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

Related posts

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது பணிப்புறக்கணிப்பினால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு..

wpengine

முஷரப் எம். பி அ. இ.ம காங்கிரசில் இருந்து நீக்கம்

News Editor

உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு விவாதம் இன்று

wpengine