Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார்..!

ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருந்தாலும் கூட ரணிலுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் ரணில் எனவும் கடுமையாக சாடினார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் ஒரு ஹிட்லர் எனக் கூறும்போது உண்மையில் சிரிப்புதான் வருகிறது. பாராளுமன்றத்தில் எழுந்து காற்சட்டையை இரு தடவைகள் தூக்கிப்பிடித்துகொண்டு ஹிடலர் என கூறினால் சிரிப்பு வராமல் வேறு என்ன வரும்? எனவும் தெரிவித்தார். 

உண்மையில் ஹிட்லர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர். ஹிட்லர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே சுட்டுகொண்டு உயிரிழந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.

Related posts

கறுப்பு பூஞ்சை தொற்றாளர்கள் அடையாளம்

wpengine

மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும்

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine