Top Story 2உள்நாட்டு செய்திகள்

டிசம்பர் 01 முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளாந்தம் சந்தைகளுக்கு..!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை(28) மற்றும் நாளை தினங்களில்(29) தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

இன்று(27) ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

4,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எரிவாயுவிற்கான முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு…

wpengine

அரச அலுவலகங்களில் நேர மாற்றம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுலுக்கு..

wpengine

இடைக்காலக் கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று

wpengine