உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேருக்கு பிணை



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 தமிழ் அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வவுனியா அல்லது கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்திற்குச் சென்று இவர்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 32 தமிழ்க் கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போதிலும், அவர்களுக்கு பிணை வழங்குவதற்கான எவ்வித அறிவுறுத்தல்களும் தமக்கு கிடைக்கவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த கைதிகளை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு குறித்த சிறைக் கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட பின்னரே பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

வீரர் வஸீம் தாஜுதீன் கொலை – சி.சி.டி.வி காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை

wpengine

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – ரிஷாத்

wpengine