Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியுடன் மனோ மற்றும் ஹக்கீம் அவசர சந்திப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெறவுள்ளது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் குறித்து ஹக்கீம் ஜனாதிபதியுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அடைந்திருக்கும் சீற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்குக் மனோ கணேசன் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமாதானப் பேச்சுகளுக்கு உகந்த சூழல் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில், சகல தரப்புகளுக்கும் இணக்கமான ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராகத் தாமதமின்றி நியமிக்க வேண்டிய கட்டாயத்தை மனோ கணேசன் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம்…

wpengine

UPDATE – மீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு..

wpengine

கூட்டு எதிர்க்ட்சியின் நால்வர் ஆளும் கட்சியில்

wpengine