ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தனுஷ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமாம்



விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை தவறாக சித்தரித்ததாக கூறி பிரபல நடிகர் தனுஷ்க்கு எதிராக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.தாமோதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனியார் டிடிஎச் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி கேவலமாக சித்தரித்துள்ளார். அதை கடுமையாக கண்டிக்கிறோம்.

உடனடியாக இந்த விளம்பர காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அதே சமயம் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி சித்தரித்த நடவடிக்கையை ஏற்கமுடியாது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லாவிட்டால் பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அவர் மீது தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

 

Related posts

கணவன் விட்டுச் சென்ற விரக்தியில் பாலியல் பொம்மையாக மாறிய விதம்.. (PhotoS)

wpengine

அம்பாறை உணவில் இருந்தது மாச்சத்தான மா’வின் ஒரு பகுதி என CIDக்கு தெரிவிப்பு…

wpengine

சமயச் சின்னங்களை அணிந்தால் வேலை நீக்கம்

wpengine