Top Story 2உள்நாட்டு செய்திகள்

தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி மாயம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தென்கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று (14) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்த அவர், நேற்று (13) இடம்பெற்ற போட்டியில் கலந்து கொண்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது அணியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கொரிய ரக்பி சங்க அதிகாரிகள் ஊடாக, இலங்கை ரக்பி அணியின் முகாமையாளர் அந்நாட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

​​​​இதனையடுத்து, அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நாட்டின் அனைத்து சினிமாத் திரையரங்குகளும் டிஜிற்றல் மயமாக்கப்படும்..

wpengine

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் 40% உயர்வு

wpengine