Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று எகிப்து செல்கிறார்..!

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்.

எகிப்தின் Sharm El-Sheikh-இல் நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பிரதான நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான யுக்திகள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine

எவன்காட் கப்பல் விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

wpengine

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

wpengine