Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான ‘அஸூர் எயார்’ (Azur Air) இன் விமானம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

335 பயணிகளுடன் குறித்த விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயார் பிரான்ஸ்’ நாளை முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள இந்த விமானங்கள் வாரந்தோறும் சேவையில் ஈடுபடும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

wpengine

இன்று(01) நள்ளிரவு முதல் தனியார் பஸ் மற்றும் ரயில் சேவைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்..

wpengine

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவுக்கு மரண அச்சுறுத்தல்…

wpengine