ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நிதி மோசடி வலையில் மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்



மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சுமார் 100 மில்லியன் ரூபா ஊழல் தொடர்பிலேயே இந்தக் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

ஹோமாகம தியகம மைதான அமைப்பு பணிகளின் போது இந்த நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதான அமைப்பின் போது தனியார் ஒப்பந்தக்காரர்களும் அரசாங்கம் ஒப்பந்தக்காரர்களுடனும் இணைந்து மோசடி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மைதான அமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவும் அண்மையில் விசாரணை செய்யப்பட்டார்.

Related posts

வெள்ளை சர்க்கரை உங்களுக்கு செய்யும் 5 துரோகங்கள்!

wpengine

Facebook ஐ நீக்க தருணம் வந்துவிட்டது Whatsapp…

wpengine

பொதுத் தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கும் சஜித் அணியினர்

wpengine