உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறையில் நாளந்தம் காட்டு யானை௧ளின் தொல்லை! பொது மக்கள் அச்சத்தில்..!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாரை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் நாளாந்தம் காட்டு யானைகளின் தொல்லைகள்காணப்படுகின்றன. இதனால், பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளார்கள். 

இன்று(29)அதிகாலையும் சம்மாந்துறை நெற்புட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அரிசி ஆலைகளைகாட்டு யானை ஒன்று சேதப்படுத்தியுள்ளது. 

மூன்று அரிசி ஆலைகளில் உள்ள மதில் சுவர்கள், நெல் களஞ்சிய அறைகள், முன் வாயிற் கதவு ஆகியவற்றைசேதப்படுத்தியுள்ளது. அத்தோடு அங்குள்ள நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளன. 

மேலும் பயன்தரும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை பிரதேசத்திற்குள் நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுளைந்து சேதங்களைஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்தவர்களாக உள்ளனர். அதனால், காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றுபொது மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். 

இதே வேளை, இன்று காலை 09.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாதலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் யானை மற்றும் மனித மோதலைகுறைப்பது தொடர்பான வழிகாட்டல் கூட்டமொன்று இடம் பெற்றது.

இதில் விவசாயிகள், பொது மக்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்சம்மாந்துறை பிரதேச வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ரீ.ஜெயதீஸனும் கலந்து கொண்டு கருத்துக்களைமுன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்தையில் மீண்டும் பல பொருட்களின் விலை உயர்வு

wpengine

ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரையில் சமூக வலைத்தளங்களின் தடை நீடிக்கும்…

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று…

wpengine