உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு:வெளியாகியுள்ள தகவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் கப்பலிலிருந்து பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் நேற்று(22.09.2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி நிறுவனத்தின் அறிவிப்பு

இதேவேளை,லங்கா நிலக்கரி நிறுவனம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பேரூந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு…

wpengine

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றது. – அமைச்சர் ரிஷாட்

wpengine

கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine