Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரிசாத் பதியூதீனின் மேன்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கொழும்பு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, ரிசாத் பதியூதீன் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று(5) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ரிசாத் பதியூதீன், வில்பத்து வனாந்தரப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு அதிகமாக பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை அழித்துள்ளார்.

இதன் காரணமாக அப்பிரதேசங்களில் அவர் சொந்தச் செலவில் மரம் நடுகை மேற்கொண்டு அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் கொழும்பு உயர்நீதிமன்றம் ரிசாத் பதியூதீனுக்கு கடந்த 2021ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

அதற்கு எதிராக ரிசாத் பதியூதீன் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜேவிபி ஆதரவு வழங்காது என தெரிவிப்பு…

wpengine

அடுத்த வாரமளவில் மீளவும் திறக்க தீர்மானம்

wpengine

கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம்

wpengine