உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டை விட்டு தப்பி சென்றவரை மீண்டும் கொண்டுவர முயற்சியா ? – சஜித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவியை விட்டு அனுப்பிவிட்டு, தான் திருமண வீட்டுக்கு செல்வதாகக் கூறி நாட்டை விட்டு ஓடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை மீண்டும் அப்பதவிக்கு கொண்டுவர சதி நடக்கிறதா என்ற சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதியில் மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு மேலும் ஒருவரை நியமிக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியை கொள்ளையடித்த ஆளுநரை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Related posts

மக்கள் பல நாட்களாக காத்திருக்க இடையில் புகுந்து அரசியவாதி அட்டூழியம்!

wpengine

மேற்கிந்தியத்தீவுகள் உடனான போட்டியில் நாணயற் சுழற்சியில் இந்தியா வெற்றி

wpengine

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி

wpengine