Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜபக்ஷ இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்புவதாக கூறப்பட்டது. ஆனபோதும் அவர் இன்று நாடுதிரும்ப மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இவ்வாறு காலம் தாமதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. புலனாய்வு பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் சென்று நாடு திரும்பிய பின்னரே, கோட்டாபய  ராஜபக்ஷ நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பமைச்சரான தாம் இல்லாத நேரம், நாட்டிற்குள் வர வேண்டாமென ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

அரகலயவினால் தேவையற்ற பிள்ளைகள் பிறக்கின்றன – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க..!

wpengine

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடமிருந்து நாளை விஷேட உரை

wpengine

‘மக்கள் காதரின் மறைவு வருத்தம் அளிக்கின்றது” அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

wpengine