Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக இரத்துச் செய்யுங்கள்! – சட்டத்தரணிகள் சங்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தவர்களைக் கைது செய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் சரத்துக்கள் பயன்படுத்தப்படுவது குறித்து நாம் மிகுந்த விசனமடைகிறோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதேயன்றி, ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பிரயோகிக்கும்போது நிகழக் கூடிய குற்றங்கள் தொடர்பில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலை : கார் தொடர்பில் விசாரணை

wpengine

எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதம் தூக்கவில்லை

wpengine

இன்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

wpengine