உள்நாட்டு செய்திகள்

மீள் உயிர்ப்பிக்கும் யாழ். பெற்றோலிய விநியோக நிலையங்கள்



காங்கேசன்துறையிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை, யாழ் பெற்றோலிய விநியோக மத்திய நிலையம் ஆகியவற்றை மீண்டும் செயற்படுத்த பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம், பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரகொடி மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோர் அண்மையில் அங்கு விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் இல்லாத பெற்றோலிய தாங்கிகளை சுத்திகரித்து, அவற்றின் ஊடாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும், உள்ளக செலவீனங்களை குறைத்துக் கொள்ள முடியும், பின்தங்கிய பகுதிகளுக்கு எரிப்பொருளை விநியோகிக்கும் செயற்றிட்டத்தை மீண்டும் உயிர்பிக்க முடியும் எனவும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

யுத்த காலப் பகுதியில் சேதமடைந்த காத்தான்குடி துறைமுகத்திலிருந்து களஞ்சியசாலைக்கு எரிப்பொருளை கொண்டு வரும் குழாய் கட்டமைப்பை திருத்தியமைக்கின்றமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

jaffna-petrolium jafna-petrol petrol petrol

 

Related posts

02 வாரங்களில் பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வௌியிட உத்தரவு

wpengine

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு கட்ட சீனாவின் உதவி

News Editor

புதிய அமைச்சிற்கான வர்த்தமானி வெளியானது

wpengine