உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து பயணிக்க தடை



மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின், மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.

சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் 158ன் முதலாவது சட்டம் இது பற்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனால் இனிமேல் இதனை மீறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு முதலாவது தடவை இறுதி எச்சரிக்கை வழங்க முடியும் எனவும், பின்னர் அதே தவறை மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மீண்டும் செய்யும் பொழுது, அவருக்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்லும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் இதனை தவிர்ந்து நடக்குமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு வேண்டுகோள் விடுக்கின்றது.

இச்சட்டத்தின் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே இன்று (31) மாலை சந்திப்பு…

wpengine

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

News Editor