உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரட்டா கைது; கேலி செய்த ஆளுங்கட்சி எம்.பி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மே 09ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்  சம்பவத்துடன் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ரட்டாவின் கைது தொடர்பில் நக்கலாக பேஸ்புக்கில் பின்னூட்டம் செய்துள்ளார்.

கோட்டா கோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரட்டாவின் கைது தொடர்பில் பேஸ்புக் பதிவொன்றுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நக்கலாக பின்னூட்டம் செய்துள்ளார்.

”ரட்டாவின் கழுத்தை நெறித்தார்களா என்று தெரியவில்லையே” என சனத் நிஷாந்த பின்னூட்டம் செய்துள்ள நிலையில், அவரது இந்த நக்கலால் போராட்டக்காரர்கள் பலரும் ஆத்திரமடைந்துள்ளனர்.

 

Related posts

பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

wpengine

பண்ணை துறையினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு…

wpengine

வன்னி மக்களுக்கான விடிவுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது- அமைச்சர் ரிஷாட்

wpengine