உள்நாட்டு செய்திகள்

மக்களின் பிரச்சினைகள், நெருக்கடிகள் தீர்ந்ததும் தேர்தல் நடத்தப்படும் : தேர்தல்கள் ஆணைக்குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நெருக்கடிகள் நிறைவடைந்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்குத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை பார்வையிடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று வருகை தந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Azeem Kilabdeen

சிங்கள மாணவன் போன்று இனவாதம் பரப்பிய மாணவனின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு பூட்டு…

wpengine