விளையாட்டு

சவால்களுக்கு மத்தியில் களமிறங்கியது இந்தியா



மொகாலியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் மொகாலியில் இன்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி, இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததால் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது.

மேலும், அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related posts

ஐபிஎல் தொடர் இந்தியாவில்

wpengine

சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும்

wpengine

கராச்சியின் மழையில் முதல் போட்டி தாமதம் [PHOTOS]

wpengine