உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பத் திட்டம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்புவதற்குத் தயாராகி வருகிறார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியா செல்லவுள்ளார். இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் அவர், அதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார். தனது மகனின் பாதுகாப்புக்காக அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் தெரிவித்தார்.

இதேவேளை, தனது அதிகபட்ச ஆற்றலுடன் சேவையாற்றியதைப் போன்று, தான் பிறந்த தாய்நாட்டுக்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டத்தரணிகள் ஆஜராகாமையினால் களனி மாணவர்களின் பிணை மனு நிராகரிப்பு

wpengine

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி..

wpengine

ஊரடங்குச் சட்டம் காலை 10.00 மணிக்கு நீக்கப்படும்…

wpengine