உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்னும் இலங்கையில் இருக்கிறார்: நான் கூறியது தவறு – சபாநாயகர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சர்வதேச செய்திச் சேவையான ஏஎன்ஐ உடனான தொலைபேசி உரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில், “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் (பிபிசி) பேட்டியின் போது தவறு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், அவர் அண்டைய நாடொன்றில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாட்டுக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்றதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(ஏஎன்ஐ செய்திச் சேவையின் ட்விட்டர் செய்தி கீழே)

 

Related posts

தஞ்சமடைந்துள்ள கர்ப்பிணிகளுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லுமாறு கோரிக்கை

wpengine

வீதிகளில் அநாவசியமாக நடமாடும் நபர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை

wpengine

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றினால் பிணை.

wpengine