உள்நாட்டு செய்திகள்

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை நேற்று நல்லிரவு இராஜினாமா செய்துள்ளனர்.

இதேவேளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் தான் விலக தீர்மானித்துள்ளதாக நேற்று  கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பெரும்பான்மையான இலங்கை மக்களினதும் மதத் தலைவர்களினதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது பங்களிப்பை செலுத்த உள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆரப்பாட்டத்தில்…

wpengine

குத்தகையின் அடிப்படையின் வாகனங்களால் சூடாகிய நாடாளுமன்றம்.

wpengine

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

wpengine