Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்கம் கலைய வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டின் நிலைமை மாற ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என  ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடியால் மாணவர்களுக்கு பாடசாலை செல்ல முடியவில்லை. மக்களுக்கு ஒரு நகரில் இருந்து இன்னுமொரு நகருக்கு செல்ல முடியவில்லை.

கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதுள்ளது, நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வாகனம் இல்லை.

நாடு இதனால் மேலும் வீழ்ச்சியடையும் எனவே, இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அமைச்சர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் மீள் சர்ச்சை

wpengine

எஸ்.பி.திஸாநாயக்கவின் வாகனத்தை மறித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

wpengine

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

wpengine