உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹிருணிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம்; ரணில் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது என பிரதமர் கூறியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் ஹிருணிகா பிரேமச்சந்திர, பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் விடயமாக ஹிருணிகா தனது இல்லத்திற்கு வந்ததாகவும் அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் பிரதமர் ரணில் கூறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

சூடான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்..

wpengine

துடுப்பாட்ட வீரர்களது எதிர்கால திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine