உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல  அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாண சபைகளுக்கான தேர்தலை கலப்பு முறையில் நடாத்த அமைச்சரவை அனுமதி…

wpengine

புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தம் நிறைவுக்கு…

wpengine

இடுப்பு பட்டியை மேலும் இருக்கமாக கட்டும், ஒரு வரவு செலவுத் திட்டமே இது – பொருளியல் விரிவுரையாளர் கணேசமூர்த்தி..!

wpengine