உள்நாட்டு செய்திகள்

விடைத்தாள் திருத்துவோருக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் இடம்பெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு, ஒரு விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள ஏலவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்திற்கொண்டு மத்திய நிலைய பணிக்குழாம் மற்றும் விடைத்தாள் பரிசோதகர்களுக்காக செலுத்தப்படும் நாளாந்த கொடுப்பனவிலும் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்விசார் தொழிற்சங்கங்களுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பிலான கோரிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சரால் தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

Related posts

வெடிப்புச் சம்பவங்கள் – விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்…

wpengine

கம்பஹா கெஹெல்பந்தர பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை…

wpengine

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen