உள்நாட்டு செய்திகள்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சாரதி மரணம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாணந்துறை – வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர் 55 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.

சாரதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவை விசேட அறிக்கை!

News Editor

சாய்ந்தமருதில் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரபிற்கு கத்தம் ஓதி, ரவூப் ஹக்கீம் சாதிக்க நினைப்பது என்ன..?

wpengine

இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

wpengine