Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்தவாரம் மற்றுமொரு ராஜபக்க்ஷ அவுட்டாகிறார்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அடுத்த சில வாரங்களில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் பதவி விலகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பதவி விலகுவதுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சவும் கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தாலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில காலமாக ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்களே அரசாங்கத்தில் கூட்டமாக பதவிவகித்தனர்.

ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் என ராஜபக்ஷ கூட்டமே எங்கும் நிறைந்திருந்தது. எனினும், முறையாக முகாமைத்துவம் செய்யாமல் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய பின்னர், ராஜபக்ஷக்களை வீடு செல்லுமாறு மக்கள் வீதிக்கி இறங்கி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்

இதையடுத்து, தன்னைத்தவிர வேறு ராஜபக்ஷக்களை அமைச்சுப் பதவிகளை வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபயவும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தீர்வு

wpengine

ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

wpengine

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி…

wpengine