ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாலியலில் மோகத்திற்கு இளஞ் சிருசுகளையும், பெண்களையும் விலைக்கு வாங்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்



ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ”யாசிதி” என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு காம மோகம் அதிகரித்துள்ளதாம்.

இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல் சித்திரவதைக்கும், கற்பழிப்புக்களுக்கும் இந்த ”யாசிதி” என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்ளாக்கப்படுகின்றமை கவலைக்குரியதே..
யாசிதி சமூகத்தை சேர்ந்த அழகான சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களின் கன்னித்தன்மையை கடுமையான முறையில் சோதனை நடத்துகிறார்களாம்.
அந்த சோதனையில், சிறுமிகள் மற்றும் பெண்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் என உறுதியான உடனேயே, அவர்களை அடிமைகள் சந்தைக்கு அனுப்பி, அங்கு அவர்கள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ளவர்களுக்கு விலைக்கு பேரம் பேசும் மிருகத்தனமான செயலில் இறங்கியுள்ளார்கள்
பின்பு, இவர்களை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள், முதல் போர் வீரர்கள் வரை அனுப்பப்பட்டு பலவந்தமாக பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி 3 மாதத்திற்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அவர்களை மறுவிற்பனை செய்யும் மூர்கத்தனத்தில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இது குறித்து ஐ.நா சபை அதிகாரியான ஜைனப் பாங்குரா (Zainab Bangura) கூறுகையில், ”’சிரியாவில் உள்ள Ragga நகரில் ”யாசிதி” சமூகத்தை சேர்ந்த அழகான சிறுமிகள் மற்றும் பெண்கள் நாள்தோறும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ள அவல நிலை நீடித்து வருகிறது.
சமீபத்தில், இயற்கைக்கு எதிரான அதீத பாலியல் உல்லாசத்திற்கு மறுத்த பெண் ஒருவரை ஐஎஸ் தீவிரவாதி உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர்”’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெறும் பழிவாங்கல் என ஐஎஸ் தலைமை தெரிவிப்பு…

wpengine

‘ஸ்வர்ணவாஹினி’ தொலைக்காட்சியின் நேரலைகள் நிறுத்தம்.. – ஊழியர்கள் 15 பேர் நீக்கம்…

wpengine

2015-07-07 கேலிச் சித்திரம்

wpengine