உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரவிந்துவை கைது செய்வதற்கான முயற்சியில் பொலிஸார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆரச்சியின் மகன் ஓட்டிச் சென்ற கெப் வண்டி மாத்தறை வல்கம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, வல்கம, சுனந்தா மாவத்தையிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கெப் வண்டி வீரகெட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ரவிந்து வெதஆரச்சியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்..! – நாபீர் பௌன்ஷேசன் ஏற்பாடு

wpengine

பெட் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி…

wpengine

புது வருட பிறப்பை முன்னிட்டு சுகாதார அமைச்சு கோரிக்கை

wpengine