உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமூக ஊடக செயற்பாட்டாளர் ரெட்டா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்னவை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 25 ஆம் திகதி, கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்  அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அது குறித்து இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வழங்கப்பட்ட நீண்ட வாக்குமூலத்தை அடுத்து கொம்பனித்தெரு பொலிஸாரால் ரட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

குறுகிய தூர ரயில் சேவைகளுக்கும் விசேட பாதுகாப்பு.

wpengine

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. – இருவர் பலி

wpengine

கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

wpengine