Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய கட்சி உறுப்பினர்கள் ஐவர் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து முன்னணித் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பிரதமராக தனித்து செயற்படக் கூடாது எனவும், அவருக்கு அமைச்சரவையில் பலமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பல மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய அரசாங்கப் பேச்சுவார்த்தையில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

க்ரிஷ் வழக்கு தொடர்பில் நாமலுக்கு எதிராக தனி விசாரணை

Azeem Kilabdeen

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் வயதெல்லை – புதிய சட்டம் இவ்வருடத்தில்  அமுலுக்கு…

wpengine

கொரோனா : மேலும் சில பகுதிகள் முடக்கம்

wpengine