Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்திடம் மண்டியிட்ட மு. கா, ம.கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஷாக் ரஹுமான் ஆகியோர் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்த இவர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இதன் போது அவர்கள் தெரிவித்தனர்.

மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

wpengine

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

wpengine

இரண்டாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ இல்லை

wpengine