Top Story 1உள்நாட்டு செய்திகள்

மின்சாரம் மற்றும் எரிபொருள் சிக்கனம் தொடர்ப்பில் விசேட சுற்றுநிருபம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இதனை தெரிவித்தார்.

இதன்போது, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தனியார்த்துறையின் சேவையாளர்களின் அலுவலக நேரத்தை திருத்துவது தொடர்பான தேசிய தொழில் ஆலோசனை சபை இன்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

இன்று (21) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தனியார் நிறுவன முதலாளிமார் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

Related posts

மரண தண்டனை அமுல்படுத்துவதை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரிய மனு ஒத்திவைப்பு

wpengine

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நாள் நிகழ்வு

Azeem Kilabdeen

அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்..

wpengine