உள்நாட்டு செய்திகள்

சொய்சா படுகொலையுடன் தொடர்புடையவர் கரலியத்தவின் தீவிர ஆதரவாளர்?



அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் சொய்சா படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய எஸ்.எப். லொக்கு என்றழைக்கப்படும் நிஷாந்த, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் தீவிர ஆதரவாளர் என்று தெரியவந்துள்ளது.

நைட் கிளப் உரிமையாளர் வசந்த சொய்சாவைக் கொலை செய்வதற்கு முன்னதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் முன்னெச்சரிக்கையொன்றும் விடுத்துள்ளார்.

குறித்த எச்சரிக்கையில், அநுராதபுரம் நகரில் தலைதூக்கிவரும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னரும் நிஷாந்த பல தடவைகள் வசந்த சொய்சாவை கொலை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். எனினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன.

இது தொடர்பாக வசந்த தரப்பினர் அநுராதபுரம் பொலிசில் மேற்கொண்ட முறைப்பாடுகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் அழுத்தம் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது வசந்த சொய்சா கொலை தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ கரலியத்தவின் ஆதரவுடன் தலைமறைவாக இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

Related posts

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று…

wpengine

மெகசின் சிறைச்சாலை : விசாரணைகள் ஆரம்பம்

wpengine

இசுருபாயவில் தவமிருக்கும் அரச மருத்துவர்கள்..

wpengine